Welcome to YTUnity

One free SpiderTaz Network account works across every network site.

Featured creators

Creators on the SpiderTaz Network

Become a creator →

நுபுவத்து ஒளிரும் முத்திரையை விழிகள் காணணும் | NUBUVATH OLIRUM | New Islamic Naat..2026

Athayi Naat Channel Video 2 months ago

Description

NUBUVATH OLIRUM | நுபுவத்து ஒளிரும் | New Islamic Song | Athayi Naat Channel

✨ நுபுவத்து ஒளிரும் ✨
The Light of Prophethood ﷺ

நபியின் மீது கொண்ட பேரன்பையும், அவர்களின் அழகிய பண்புகளையும் போற்றிப் பாடும் இனிய இஸ்லாமியப் பாடல். ❤️

🎙️ Artists: Anees Ahamed Athayi × Riyaludheen Athayi
✍️ Lyrics: Arifa Jamal (Lucky)
🎼 Music: Fahmi Farooqi
🎬 DOP & Editing: ANC Studio
🏢 Production: Athayi Productions

Presented by Athayi Naat Channel

━━━━━━━━━━━━━━━━━━

🎵 LYRICS | பாடல் வரிகள்

நுபுவத்து ஒளிரும் முத்திரையை விழிகள் காணணும்
எங்கள் விழிகள் காணணும்
நூரே முஹம்மதை காலமெல்லாம் விழிகள் காணணும்
இரு விழிகள் மிளிரணும்

உயிருக்குள் உயிரான நபியை நாங்கள் காணணும்
என் கனவினிலும் நினைவினிலும் கண்டு மகிழணும்

கண்ட காட்சி கண்கொள்ளாக் காட்சியாகணும்
அது கல்பத்திலும் கண்களிலும் நிறைந்துலாவணும்

சாந்த நபி காந்தப் பார்வை மீது விழுகணும்
அப்பார்வை போர்வையாகி நாங்கள் சாந்தி அடையணும்

நுபுவத்து ஒளிரும் முத்திரையை…

உம் முகத்தைப் பார்த்து ரசிக்க வேண்டும் மரஹபா
உங்களின் நாமம் ஓதி அழைப்போம் மரஹபா
ஆமினாவின் திருமகனே நீரும் மரஹபா
காசிம் குலக் கண்மணி நீரும் மரஹபா

ஸலவாத்தின் நபியே மரஹபா
என் நாவின் இருப்பே மரஹபா
உயிர்த் தியாக உருவே மரஹபா
மரஹபா… மரஹபா…

கஸ்தூரி மேனி வாசம் எங்கள் நாசி நுகரணும்
அந்த வாசம் நுகர்ந்த எங்கள் வாழ்க்கை வசந்தமாகணும்

சங்கை நபி ஸ்பரிசம் உணரும் மேனி ஆகணும்
அந்த மேனி எங்கும் நபியின் நூறு பட்டு ஜொலிக்கணும்

எத்திசைக்கும் ஒலிக்கும் ஸலவாத்து செவிக்குள் புகணும்
புகுந்தவுடன் உள்ளத்திலே உவகை பொங்கணும்

ஸல்லல்லாஹு அலைக்க யா ரசூலல்லாஹ்
வஸல்லம் அலைக்க யா ஹபீபல்லாஹ்

என் உணர்வை நான் இழந்து
உம் ரவ்லா தவம் இருந்து
படிப்பேன் நான் என்னை மறந்து
உம் அருகில் நான் இருந்து கொண்டு
வரி வரி நான் புகழ்ந்து கொண்டு
யாருமில்லா ஏழைபோல் பிச்சை கிடைக்கிறேன்

உமைத்தான் நான் கெஞ்சுகின்றேனே
இந்த ஏழை முகம் ஏன் தயக்கம் நபியே… (2)

உம்மி நபி வாய் ஊறும் உமிழ்நீரையே
நாங்கள் விருந்தாக்கி மருந்தாக்கி சுகத்தைக் காணணும்

கார் மேகம் குடை பிடிக்கும் கரத்தைப் பற்றணும்
அக் கரத்தோடு பொற்பதிக்குள் நாங்கள் நுழையணும்

செம்மல் நபி சென்ற வழி எம் பாதம் செல்லணும்
எங்கள் பாவமெல்லாம் பனியைப் போல உருகி மறையணும்

நுபுவத்து ஒளிரும் முத்திரையை…

நபியே… உயிரே…

நபியவரின் புகழைப் பாடி மகிழ்வோம்
இத்தரணியிலே தலை நிமிர்ந்து வாழ்வோம்

மாண்பு நபி மத்ஹ் ஓதி மன்றம் மணக்கணும்
நபி ஸலவாத்து ஓத இதழும் என்றும் இனிக்கணும்

உண்மை நபி உம்மத்தாக உலகில் உதித்தோமே
அந்த உத்தமரின் அருள்கரமும் வரமும் பெறுவோமே

யா ரசூலல்லாஹ் என்று தினமும் அழைப்போமே
உங்கள் பாதணியில் எங்கள் உயிர் விடுவோமே

சொல்லழகோடு சுந்தரரின் செயலழகும்
அந்த கணமேனும் கண்டு நாங்கள் சொக்கி நிற்கணும்

முத்தொளிரும் சிரிப்பொலியைக் கேட்டு ரசிக்கணும்
சிறு துளியேனும் எங்கள் மேனி பட்டு தொட்டுப் போகணும்

எங்கள் உறுப்பனைத்தும் உண்மை நபி சொல்லை ஏற்கணும்
இறைவா… அருள்வாய்…
இறைவா… தருவாய்…

எங்கள் உறுப்பனைத்தும் உண்மை நபி சொல்லை ஏற்கணும்
அதன் பொருட்டு எங்கள் சிரமம் நீங்கி சீலம் வாழணும்

அதன் பொருட்டு எங்கள் சிரமம் நீங்கி சீலம் வாழணும்
என் வாழ்வு கழியணும்
பிரியம் அடையணும்

━━━━━━━━━━━━━━━━━━

❤️ இந்த இனிய இஸ்லாமியப் பாடலை Like, Share & Subscribe செய்யுங்கள்.

🔔 Athayi Naat Channel – Islamic Songs | Naats | Spiritual Content

#NubuvathOlirum #நுபுவத்துஒளிரும் #AthayiNaatChannel #IslamicSong #TamilIslamicSong #Naat #Nabi #Muhammad ﷺ #Salawat #NewIslamicSong #AthayiProductions